புறக்கோட்டைதொடருந்து நிலையத்திற்கு முன்பாக வீழ்ந்த பாரிய மரம் (படங்கள்)
Colombo
Sri Lanka
Weather
By Dilakshan
கொழும்பு, புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் சனிக்கிழமை (02) இரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, பிரதான வீதிகள் உள்ளிட்ட தாழ்நிலபிரதேசங்கள் வௌ்ளம் சூழந்து காணப்பட்டது.
இந்நிலையில் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
அகற்றும் பணி
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டமையால் ஒல்கெட் மாவத்தை பகுதியின் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்