மனித புதைகுழிகளுக்கு சர்வதேச கண்காணிப்பை கோர முடியாதாம் - பாதுகாப்பு அமைச்சின் பதில்

Kamal Gunaratne Ministry of Defense Sri Lanka
By Vanan Jul 13, 2023 02:56 PM GMT
Report

சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பை கோருவது சிறுபிள்ளை தனமானது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள் என தமிழ் அரசியல்வாதிகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொடூரமான யுத்தத்தில் முக்கிய பங்கு

மனித புதைகுழிகளுக்கு சர்வதேச கண்காணிப்பை கோர முடியாதாம் - பாதுகாப்பு அமைச்சின் பதில் | Human Burials Mullaitivu Tamil Peoples Sri Lanka

தமிழ் மக்களின் இன விடுதலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட மிகக் கொடூரமான யுத்தத்தில் முக்கிய பங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஜெனரல் கமல் குணரத்ன வகித்தார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொக்கிளாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் இந்தக் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தனவை தொடர்புகொண்டு வினவிய போது, அகழ்வு பணிகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

"வன்னிப் பிரதேசம் யுத்தம் நடந்த பூமி எனவும் அந்தப் பகுதியிலேயே மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அந்த புதைகுழி தோண்டப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் ஜெனரல் கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளர்.

அகழ்வு பணிகள்

மனித புதைகுழிகளுக்கு சர்வதேச கண்காணிப்பை கோர முடியாதாம் - பாதுகாப்பு அமைச்சின் பதில் | Human Burials Mullaitivu Tamil Peoples Sri Lanka

சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அரச புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருக்கும் என்பதுடன், அதனை தவிர்க்க முடியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025