இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு காரணத்தை கூறியது ஐக்கிய மக்கள் சக்தி
human
rights
By Vasanth
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கத்தின் பலவீனமே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி இதை குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் உரிய வௌிநாட்டுக் கொள்கை இல்லாமை, அரசாங்கம் மனித உரிமைகளை மீறுகின்றமை மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.