லொஹானுக்கு வலுக்கும் சிக்கல் -இத்தாலியிலிருந்து திரும்பியவுடன் மகிந்த எடுக்கவுள்ள நடவடிக்கை
human rights
lohan ratwatte
mahinda rajapaksha
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலியிலிருந்து திரும்பியவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்திற்குப் பின்னர் நேற்று மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகளிடம் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.