செம்மணி அகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்திய என்புகளின் குவியல்! 318 ஆக உயர்ந்த மனித எலும்புக்கூடுகள்

Sri Lankan Tamils Jaffna chemmani mass graves jaffna
By Rakesh Jun 09, 2026 10:32 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 318 ஆக உயர்வடைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், விசேட நிபுணர்களின் முன்னிலையில் நேற்று அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இஷாராவின் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மாஃபியா! விசாரணையில் புதிய திருப்பங்கள்

இஷாராவின் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை மாஃபியா! விசாரணையில் புதிய திருப்பங்கள்

ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூடுகள்

நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளின் 4 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்திய என்புகளின் குவியல்! 318 ஆக உயர்ந்த மனித எலும்புக்கூடுகள் | Human Skeletons Found Chemmani Excavat Rise To 318

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் மொத்தமாக இதுவரை 318 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 302 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வுகளின் போது, மனித உடல்கள் மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான பல தடயங்கள் சிக்கியுள்ளன.

குறிப்பாக, எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று தொடுகையுற்ற (ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னப்பட்ட) நிலையில் இரு வெவ்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கை நோக்கி வரும் இரண்டு எரிபொருள் கப்பல்கள்

இலங்கை நோக்கி வரும் இரண்டு எரிபொருள் கப்பல்கள்

விசேட குவியல்

அவற்றில் ஒரு பகுதியில் ஆறு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், பிறிதொரு பகுதியில் நான்கு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத் தொடுகையுற்றவாறு கண்டறியப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்திய என்புகளின் குவியல்! 318 ஆக உயர்ந்த மனித எலும்புக்கூடுகள் | Human Skeletons Found Chemmani Excavat Rise To 318

இதில் விசேடமாக, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் ஒன்று, அதன் கால்கள் இரண்டும் பின்பக்கமாக மடிக்கப்பட்ட நிலையிலேயே புதைக்கப்பட்டுள்ளமை தடயவியல் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, மனித என்புகளின் எச்சங்கள் அடங்கிய விசேட குவியல் ஒன்றும் நேற்றைய அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் உள்ள மண்ணைச் சீர்செய்து, எச்சங்களைச் சேதமடையாமல் சுத்தப்படுத்தும் பணிகளில் அகழ்வாராய்ச்சிப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026