செம்மணியில் மற்றுமொரு மனித பேரவலம் : கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்
Jaffna
By Jaso
யாழ்ப்பாணம்(jaffna), செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மீண்டும் அகழ்வுப் பணிகள்
ஆரம்பத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுகொள்ளப்பட்டதையடுத்து இன்று அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வுப் பணியுடன் 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேநேரம் மேலும் பல எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி