22 வெளிநாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவி! பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்
திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 வெளிநாடுகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு இன்று(01) வெளியிட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் (WFP) வழங்கிய மனிதாபிமான உதவிகளை இலங்கை பெற்றதாகவும், இந்த வெளிநாட்டு உதவிப் பங்குகளை மக்களிடையே முறையாக நிர்வகித்தல், ஒருங்கிணைப்பு மற்றும் திறம்பட விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி 'உயர் அதிகாரிகளின் வெளிநாட்டு உதவி (சரக்கு) ஒருங்கிணைப்புக் குழு' (HL-FRAC) ஐ நிறுவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீர்க்கமான நடவடிக்கை
இதன்படி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையிலான குழு, பல சந்தர்ப்பங்களில் கூடி, நிவாரணச் செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்ய தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக நாட்டிற்குள் பெறப்படும் வெளிநாட்டு உதவிகளைப் பாதுகாப்பாகவும் முறையாகவும் சேமித்து வைப்பதற்கும், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் முறையாக நிவாரணம் வழங்குவதற்கும் தற்போது தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் (NDRSC) மூலம் மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |