கொழும்பு கடற்கரையோரம் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து கரையொதுங்கும் ஆமைகள்
death
turtles
colombo seasore
By Jaso
கொழும்புக்கு அருகிலுள்ள மொரட்டுவ உயன – பொல்வத்த கடற்கரையில் பெருமளவான ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான ஆமைகள் இவ்வாறு இன்று அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில ஆமைகளின் உடல்களில் காயம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் எக்ஸ் பியர் பேர்ள் கப்பல் தீப்பிடித்து மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த உயிரினங்கள் இறந்து கரையொதுங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்