திடீரென நாட்டை விட்டு தப்பியோடும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: வெளியான காரணம்
நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்கள் விசேட அதிரடிப்படையினர் மீது பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படை (Special Task Force) மற்றும் காவல்துறை புலனாய்வுப் பிரிவு அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் தஞ்சம்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேல் மாகாணம் (Western Province) மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியே அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் சுற்றிவளைப்புகள் காரணமாக இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தை விட்டு விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |