தெஹிவளை கடலில் உள்ள முதலையை பிடிக்க தேடுதல் வேட்டை ஆரம்பம்!
Crocodile
Hunt
Dehiwala sea
C. B. Ratnayake
By MKkamshan
தெஹிவளை கடலில் சுழியோடியொருவரை தாக்கிய முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க (C. B. Ratnayake) தெரிவித்துள்ளார்.
தெஹிவளை கடற்பரப்பில் 58 வயதுடைய சுழியோடி ஒருவர் மூழ்கிய போது முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் நேற்றைய தினம் இருந்த முதலை நடுகடலில் இருப்பதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என கூறிய அவர், அந்த முதலை களப்பை நோக்கி வருகை தந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்படை மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி