மனைவியின் இரண்டு கால்களையும் துண்டித்து கணவர் தப்பியோட்டம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
புஸ்ஸ மெதவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியையாக இருந்த தனது மனைவியின் இரண்டு கால்களையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவமானது, இன்று (16) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப தகராறு காரணமாக குறித்த சந்தேகநபர் இந்த குற்றத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 34 வயதுடைய ஆசிரியை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பியோட்டம்
இந்நிலையில், கால்களை வெட்டிவிட்டு வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றி 2018ஆம் ஆண்டு முறையற்ற முறையில் வெளியேறியவர் எனவும், ரத்கம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்