காவல்நிலையத்தில் கைவரிசையை காட்டிய தம்பதியினருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
முறைப்பாடு ஒன்றுக்காக காவல்நிலையத்திற்கு சென்று பணப்பை ஒன்றை திருடிய கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (06) பிற்பகல் வாத்துவ காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது.
குடும்பத் தகராறு தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ய கணவன்-மனைவி தம்பதியொன்று வந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பணப்பையை திருடியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சம்பவம் குறித்து வாத்துவ குரே மாவத்தையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்