மனைவியை கொன்று குப்பை மேட்டில் வீசிய கணவன் உட்பட இருவர் கைது
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக தனது மனைவியை குத்திக் கொன்று உடலை இரண்டாக வெட்டி குப்பை மேட்டில் வீசியதாக தெரிவிக்கப்படும் கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருமகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தாயான விமலாவதி( வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டாவது கணவருடன் வசித்து வந்த பெண்
கொலை செய்யப்பட்ட பெண், ஸ்டேட் புரா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஒரு மகளுடன் தனது இரண்டாவது கணவருடன் கீழ் மாடியில் வசித்து வருவதாக காவல்துறையினர்தெரிவித்தனர். மற்றைய மகள் தனது கணவருடன் மேல் மாடியில் வசித்து வருகிறார்.
கொலைக்கு முதன்மையான காரணம்
கொலை செய்யப்பட்ட பெண் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், போதைப்பொருள் வாங்க வந்த 25 வயது இளைஞனுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதுவே இந்தக் கொலைக்கு முதன்மையான காரணம் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாககாவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
