யாழில் நடந்த கொடூர சம்பவம்! திருவலையால் அடித்தே கொலை செய்யப்பட்ட கணவன்
யாழ்ப்பானம் - பூம்புகார் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் திருவலையினால் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடு முற்றியதாலேயே கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது துரைராசா செல்வராசா (வயது - 32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இவர் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.
மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர். அத்துடன் கொலையாளியான மனைவியினை பொலிஸார் பெண் கைது செய்துள்ளனர்.
திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில் 5 இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.