வெளிநாட்டவருடன் மனைவி வருகை : வீட்டிற்கு தீ வைத்து கொளுத்திய கணவர்
இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் குவைத்திலிருந்து நபர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவமானது இன்று அதிகாலை (01) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் வேலை செய்த வீட்டிலிருந்த குவைத் நாட்டைச் சேர்ந்த 80 வயது முதியவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் தங்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
குவைத் நாட்டவர்
இதன்போது கணவர் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதியெனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பலத்த சேதம்
இந்த தீ விபத்தில் காயமடைந்த குவைத் நாட்டவர் மற்றும் சந்தேகநபரின் மனைவி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு மற்றும் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் பிபில காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |