மனைவியின் கத்திகுத்தில் படுகாயமடைந்த கணவனான சிவில் பாதுகாப்பு அதிகாரி
தனது மனைவியின் கத்திகுத்து தாக்குதலில் கணவரான சிவில் பாதுகாப்பு அதிகாரி படுகாயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை, சொரபோர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இன்று வியாழக்கிழமை (6) மஹியங்கனை மருத்துவமனையில்கணவர் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு
வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, மனைவி தனது கணவரை கத்தியால் குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கத்தியால் குத்தப்பட்ட நபர், கிராதுருகோட்ட துணை மாவட்ட தலைமையகத்தில் பணியாற்றும் 43 வயதுடைய சிவில் பாதுகாப்பு அதிகாரி என்றும், மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று குழந்தைகளின் தாயான பெண் கைது
சம்பவத்தை அடுத்து மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயான 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |