மனைவியை கொலை செய்த கணவர் 14 வருடங்களின் பின்னர் சிக்கினார்
தனது மனைவியை தடியால் தாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன் கணவன் 14 வருடங்களின் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரான கணவர் 2007 ஆம் ஆண்டு தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததுடன், அப்போது தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஜாஸ்மின் ரஞ்சனி (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
74 வயதுடைய சந்தேகநபர் இன்று (23) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். காவல்துறை உத்தியோகத்தர் குழுவொன்று எம்பிலிப்பிட்டிய துங்கம பிரதேசத்திற்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளது.
2009ஆம் ஆண்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த டி சில்வாவின் மேற்பார்வையில் காவல்துறையினர் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.