அனுராதபுரத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன்
அனுராதபுரம், கொரக்கஹவெவ வனப்பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் இன்று (28.08.2026) காலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அனுராதபுரம் - உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு
குறித்த நபர் இன்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |