”நான் நலமாக உள்ளேன்” அஜித் ரோஹண வெளியிட்ட அறிவிப்பு
தான் தற்போது, குணமடைந்துவருவதாக முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற முடியும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் படம் போலியானது என காவல்துறை ஊடகப் பிாிவு தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பகபில் அவர் கருத்து வெளியிடுகையில்,
இந்த நிலையில், ”நான் நலமாக உள்ளேன். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வீடுதிரும்ப முடியும் என தெரிவித்தனர்.
எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக குறிப்பிட்டு வேறொரு நபாின் படம் பகிரப்பட்டுவந்தது. அது நான் தான் என நினைத்த பலர், விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என குறித்த புகைப்படத்தை பகிர்ந்தனர். அதற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
