எம்.பிக்களுக்கான வாகனங்கள் : பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வேண்டாம் என்று தாம் கூறவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு மற்றும் வாகனங்கள் வேண்டாம் என்று கூறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உணவின் விலையை சந்தை நிலைமைகளின் அடிப்படையில் அதிகரிக்குமாறு எமது கட்சியே கோரியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வந்து பணிகளை ஆற்ற முடியாது. நாட்டை சாப்பிட்டவர்கள் தற்பொழுது நாடாளுமன்ற உணவு குறித்து விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எப்படியாவது நாடாளுமன்றிற்குள் நுழைந்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது“ என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |