மனைவியின் உழைப்பில் வாழ்கிறேன் -சம்பளத்தை வழங்கமாட்டேன் -ஆளும் கட்சியின் மற்றுமொரு எம்.பியும் அறிவிப்பு
salary
covid money
s.b. dissanayake
By Sumithiran
கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு தனது மாத சம்பளத்தை வழங்க முடியாது என ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும் மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆளும் தரப்பைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் தமது சம்பளத்தை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி