நான் குற்றமற்றவள் : நீதிமன்றில் டயானா கமகே வாதம்
செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (Criminal Investigation Department) தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, தாம் குற்றமற்றவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் (Sri Lanka) தங்கியிருந்தமை தொடர்பில் டயானா கமகே மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றின் (Colombo Magistrate's Court) முன்னிலையில் அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்ததன் பின்னர் டயானா கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செல்லுபடியாகும் வீசா
அதனையடுத்து, 07 குற்றப்பத்திரிகைகளையும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், குற்றப்பத்திரிகையில் சாட்சியங்களாக குறிப்பிடப்பட்டுள்ள 01 மற்றும் 13 ஆவது சாட்சிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க (Sanaka Ranasinghe) இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைக்க வேண்டிய அவசியம் இருப்பின் எதிர்காலத்தில் பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செல்லுபடியாகும் வீசாக்கள் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தக் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |