நான் பதவி விலக போவதில்லை: மத்திய வங்கி ஆளுநர் அதிரடி
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் தான் பதவி விலகபோவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, மறுபரிசீலனை போன்ற காரணங்களால் நான் வெளியேறமாட்டேன் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.
நான் பதவி விலக மாட்டேன்
அத்துடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு நான் அதை செய்தேன்.
வதற்கு இதை ஒரு காரணமாக பார்க்கவில்லை. இந்த முடிவு மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிற்சங்கங்களுடன் பேசி முடிவெடுக்கப்படுகிறது என்றும் வேறொருவருடன் சேர்ந்து விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல.
இது ஊழியர்களின் நலனுக்காக கூட்டாக எடுக்கப்பட்டது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |