அதிகரிக்கும் பதற்றம் - பாக் அணு ஆயுதம் : இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
பாகிஸ்தானின் (Pakistan) அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என இந்திய (India) பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (15.05.2025) சிறிநகருக்குச் சென்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பாகிஸ்தான் இராணுவத்தால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை அமைச்சர் ஆய்வு செய்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹல்காமில் கொல்லப்பட்ட மக்கள்
மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது, “தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சலான வீரர்களின் உச்சபட்ச தியாகத்துக்கு முதலில் நான் தலைவணங்க விரும்புகிறேன். அவர்களின் நினைவுகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். காயமடைந்த வீரர்களின் துணிச்சலுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
பாகிஸ்தானின் அணு ஆயுதம்
இராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டு உள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம்.பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு சக்தி முகமை பரீசிலனை செய்ய வேண்டும்.
அணு ஆயுதங்களை வைத்து கொண்டு பாகிஸ்தான் அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்குகளை சர்வதேச அணு சக்தி முகமை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது குறித்து உலக நாடுகள் யோசிக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
