உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை : புடின் எடுத்த அதிரடி முடிவு
ரஷ்யா – உக்ரைனுக்கிடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) கலந்து கொள்ள மாட்டார் என உத்தியோக பூர்வ தகவல் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா (Russia) – உக்ரைனுக்கிடையிலான (Ukraine) போர் நிறுத்தம் தொடர்பான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (15.05.2025) துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்து கொள்ள மாட்டார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்
ரஷ்யாவின் பேச்சுவார்த்தை
ஆனால் ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக் குழுவில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர், துணை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், ஜனாதிபதியின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி, துணை வெளியுறவு அமைச்சர் கலூசின் மிகைல் யூரிவிச் மற்றும் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோர் மட்டுமே ரஷ்ய பிரதிநிதிகளாக பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை அன்று, உக்ரைனுடன் "எந்த முன்நிபந்தனையும் இல்லாமல்" இஸ்தான்புல்லில் நேரடி பேச்சுவார்த்தை நடத்த புடின் முன்மொழிந்தார்.
உக்ரைன் ஜனாதிபதி
இதற்கு பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி புடினை நேருக்கு நேர் சந்திக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
அதே நேரம், புடின் கலந்து கொண்டால், தானும் கலந்து கொள்ள யோசிப்பதாக ட்ரம்ப் முன்னர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துருக்கி பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை புட்டின் கலந்து கொண்டால் மட்டுமே நான் கலந்து கொள்வேன் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோதிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
