ஐபிசி தமிழின் உறவுப்பாலம் : இன்றையதினம் மட்டக்களப்பில் பயனடைந்த குடும்பங்கள்
ஐபிசி தமிழின் உறவுப்பாலம் உதவிச் செயற்பாடு இன்றையதினம்(06) மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஐபிசி தமிழின் உறவுப்பாலம் செயற்பாடு, உதவி வழங்குபவர்களின் பேராதரவுடன் உலருணவுப்பொருட்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இலண்டனைச் சேர்ந்த மீரா ஜூவ்லறி மாட் நிறுவனத்தினர் அனுசரணை
இன்றைய இந்த உதவிப்பொருட்கள் வழங்கல் செயற்பாட்டிற்கு இலண்டனைச் சேர்ந்த மீரா ஜூவ்லறி மாட் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர்.

இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பூலாக்காடு கிராம அபிவிருத்தி சங்கத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்படி அம்புஸ்குடா கிராமத்தில் 19 குடும்பங்களுக்கும், பொண்டுகள்சேனை கிராமத்தில் 41 குடும்பங்களுக்கும்,பூலாக்காடு கிராமத்தில் 12 குடும்பங்களுக்கும் பெரியவேரம் கிராமத்தில் 44 குடும்பங்களுக்கும், வட்டிபோட்டமடு கிராமத்தில் 09 குடும்பங்களுக்கும் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













