ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு திருகோணமலையிலும் முன்னெடுப்பு
ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு இன்றையதினம்(06) திருகோணமலை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள், உலருணவுப்பொருட்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றது.
திருகோணமலையில் உதவிச் செயற்பாடு
இதன் முதலாவது செயற்பாடு மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தது.அடுத்த உதவிச் செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடுத்த கட்ட செயற்பாடு இன்றையதினம் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உப்பூரல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வெருகல் பிதேச செயலரும் வரகை தந்து இந்த உதவிப்பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.













