மடுல்சீமை பகுதியை சென்றடைந்த ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலம் நிவாரணத் திட்டம்
டித்வா சூறாவளியால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலம் நிவாரணத் திட்டம் இன்றும் பதுளையின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலம் நிவாரண யாத்திரைக்காக பொதுமக்களால் வழங்கப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், ஐ.பி.சி தமிழின் உறவுப் பாலம் நிவாரணப் பணி இன்றைய தினம் (23.12.2025) ஊவா மாகாணத்தின் பதுளை, மடுல்சீமை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மடுல்சீமை
இதன்போது மடுல்சீமை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை எமது ஐ.பி.சி குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

மடுல்சீமை - ஊவாக்கலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எமது திட்டத்தில் பொதுமக்களின் இன்னல்களும் வெளிப்பட்டிருந்தன.
குறித்த பிரதேசமானது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளதால் மக்களுக்கான முழுமையான உதவித்திட்டங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்பட்டது.
அரசாங்கம் நிவாரணங்களை ஒதுக்கியுள்ளபோதும் பெரும்பான்மையின மக்களுக்கே நிவாரணங்கள் அதிகமாக சென்றடைவதாக மக்களினால் கவலை வெளியிடப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








