உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஐ.பி.சி தமிழின் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!
தமிழரின் பாரம்பரிய பண்டிகையான உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்றைய தினம் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இன்றைய நாளில் எமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை வழிபட்டு, தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார அறிவுறுத்தலுக்கமைய பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய நன்நாளில் தைத்திருநாளை கொண்டாடும் தமிழ் மக்களுக்கும், ஐ.பி.சி தமிழின் நேயர்களுக்கும், அனுசரணையாளர்களுக்கும் எமது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மலர்ந்திருக்கும் தமிழ் தை திருநாளை மிகவும் மகிழ்ச்சியாகவும் தற்போது நிலவும் அசாதாரண சூழலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறும், அனைவருக்கும் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமென ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தினர் மனதார வாழ்த்துக்கின்றோம்.