பத்தாவது அகவையில் தடம் பதிக்கும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சி! குவியும் வாழ்த்துக்கள்
பத்தாவது ஆண்டு அகவையில் அடியெடுத்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, தனது பணியை சீரும் சிறப்பாகவும் இன்று போல் என்றும் தொடர வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பல்வேறு சவால்களைக் கடந்து தமிழ் தேசியம் சார்ந்த இலக்குக்குரிய தடத்தில் பயணிக்கும் ஐ.பி.சி தமிழ் குடும்பம் தாயகம் மற்றும் புகலிடத்தில் தனது ஊடகப்பணியைத் தொடர்கிறது.
ஐபிசி தமிழ் குடும்பத்தின் மூத்த அங்கமாக கால்நூற்றாண்டைக் கடந்து ஐபிசி தமிழ் வானொலி சேவை இயங்கிவரும் பின்னணியில் ஐ.பி.சி தமிழ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியாகவும் புதிய பரிணாமத்தைப் பெற்றது.
தமிழ்மக்களின் துயரங்கள்
இதனைத் தவிர உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் தமிழ் மக்களுக்குரிய தொலைக்காட்சி செய்திகளை செய்திப்பிரிவு தயாரித்து வழங்குகின்றது.
உறவுப்பாலம் போன்ற நிகழ்ச்சிகள் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் துயரங்களை வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுக்கும் பணியையும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி மேற்கொண்டுவருகின்றது.
தடம் பதித்து
அந்தவகையில்,ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, தனது தாயகக் கலையகத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல சிறப்பான விடயங்களை தன்னகத்தே சுமந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைகாட்சி இன்று (19) தனது பத்தாவது ஆண்டு அகவையில் தடம் பதித்து நிற்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |