பிரபல கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்டது தடை : ஐசிசி அதிரடி
விதிமுறைகளை மீறி பரிசுப்பொருட்களை பெற்று குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மேற்கிந்திய கிரிக்கெட்அணியின் பிரபல வீரர் மார்லான் சாமுவேல்ஸ் என்பவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ரி 20 லீக் போட்டியில் விதிமுறைகளை மீறியதாக சாமுவேல்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விதிமுறைகளை மீறி பரிசுப்பொருள் மற்றும் ஆதாயம் பெற்றது
இதன்படி விதிமுறைகளை மீறி பரிசுப்பொருள் மற்றும் ஆதாயம் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை
ஆனால் விசாரணையின் போது அவர் ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு சாமுவேல்ஸ்க்கு இரண்டு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |