ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா
ரி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி.(International Cricket Council) வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் (West Indies) - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான (South Africa) இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் மற்றும் இங்கிலாந்து(England) - பாகிஸ்தான் (Pakistan) இடையிலான 4 ரி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன.
இதில் மேற்கிந்திய தீவு 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியிருந்தது.
ஐ.சி.சி தரவரிசை
இந்நிலையில், பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா (India) , அவுஸ்திரேலியா (Australia) மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தரவரிசையில் காணப்பட்டது.
6வது இடத்தில் காணப்பட்ட மேற்கிந்திய தீவு அணி சிறப்பான ஆட்டத்தின் மூலம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்து (New Zealand) மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடர்வதுடன்,பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை தன்வசம் கொண்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா 3-இடங்கள் சரிந்து 7-வது இடத்திலும்,கடைசி 3 இடங்களில் இலங்கை (Sri lanka) , வங்காளதேசம் (Bangladesh), ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |