ரி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள்: முதலிடத்தில் யார்!
ரி20 உலககோப்பை தொடர் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார் என பார்க்கலாம்.
ஒவ்வொரு போட்டியின் போதும் ஏதோவொரு சாதனை நிலை நாட்டப்படுகின்றது.முன்னைய சாதனை முறியடிக்கப்படுகின்றது.
ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர்கள் வீரர்கள் எவ்வளவு ஓட்டங்கள் பெற்றார்கள் என பார்த்திருந்த நிலையில் தற்போது எவ்வளவு குறைவான பந்தில் அதிக ஓட்டங்கள் அடிக்கிறார்கள் என பார்க்கிறார்கள்.
அதிக ஸ்ட்ரைக் ரேட்
அந்தவகையில், ரி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார் என பார்க்கலாம்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்,இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இவரின் ஸ்ட்ரைக் ரேட் 144 என்று அளவில் உள்ளது.
இலங்கை வீரர்
தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 143 என்று அளவில் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலின் ஸ்ட்ரைக் ரேட் 142 என்று அளவில் உள்ளது. இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இலங்கை அணியின் ஜெயவர்த்தனே உள்ளார்.
இந்திய வீரர்
இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 134 என்ற அளவில் உள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் உள்ளார்.
இவரின் ஸ்ட்ரைக் ரேட் 133 அளவில் உள்ளது.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி உள்ளதுடன் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 131 என்று அளவில் உள்ளது.
ஏழாவது இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட்131 என்று அளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |