இந்தியா - பாகிஸ்தான் ரி20 போட்டியை குறி வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: சுவர் ஒட்டிகளால் பரபரப்பு
ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா(India) பாகிஸ்தான்(Pakistan) போட்டியன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று வெளியானதை தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு(ISIS) ஆதரவான குழுவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு வரைபடம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருக்கின்றான்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
அதில், “நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்...நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்...” என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த சுவரொட்டியில், நசவ் விளையாட்டரங்கில் ஜூன் 9ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,அன்றைய தினம் மிகவும் எதிர்ப்பார்ப்பு மிக்க போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.
அந்த சுவரொட்டியில், மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்கள், டைனமைட் குச்சியுடன் நேரத்தை கணிப்பிடும் கடிகாரம் என்பன காணப்படுகின்றது.
அச்சுறுத்தல்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை கரீபியன் தீவுகள் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா (அமெரிக்கா) ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் குரூப்-ஸ்டேஜ் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மட்டத்தை அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின்(ஐசிசி) செய்தித் தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "போட்டியின்போது அனைவரின் பாதுகாப்பும் எங்கள் முதல் முன்னுரிமையாகும், மேலும் நாங்கள் ஒரு விரிவான மற்றும் வலுவான பாதுகாப்புத் திட்டத்தை வைத்திருக்கிறோம். என தெரிவித்துள்ளார்.
ரி20 உலகக் கிண்ண போட்டி
தாக்குதல்களை இஸ்லாமிய அரசு ஊக்குவித்ததாக முன்னர் செய்திகள் வெளியானபோதிலும், போட்டியின்போது பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சத் தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னர் குறிப்பிட்டிருந்தது.
இஸ்லாமிய அரசிடம் இருந்து அச்சுறுத்தல் வெளிப்பட்டது என்பதை ஐ.சி.சி.யும் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸும் (மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை) உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |