ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்
ஐபிஎல்(Ipl) கிரிக்கெட் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிப் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம்(26) சென்னை சேப்பாக்கத்தில் இடம்பெற்றது.
கொல்கத்தா அணி(Kolkata Knight Riders) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையில் நடந்த இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
நாணயசுழற்சியில்,வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய, ஐதராபாத் அணி(Sunrisers Hyderabad) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைந்தபட்ச ஓட்டங்களை பெற்ற அணி என்ற மோசமான சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது.
முறியடிக்கப்பட்ட சாதனைகள்
இதற்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில், மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி எடுத்த 125 ஓட்டங்களை குறைந்தபட்ச ஓட்டங்களாக இருந்தது.
இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில், முதலில் துடுப்பெடுத்தாடிய அணியின் வீரர்கள் 30 ஓட்டங்களுக்கு மேல் எடுக்காமல் இருந்தது இதுவே முதல் முறையாகும்.
நேற்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ஓட்டங்களை பெற்றார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, இதுவரை 3 முறை இந்திய மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதோடு 3 இறுதிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், கொல்கத்தா அணி சார்பாக பந்துவீசிய 6 பந்து வீச்சாளர்களும், குறைந்தது ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள். ரசல் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளும், நரைன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு அணியின் 6 பந்து வீச்சாளர்களும் விக்கெட் எடுப்பது இரண்டாவது முறையாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
மேலும், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மொத்தம் 56 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளது.
எனவே, ஐபிஎல் இறுதிப்போட்டியில், ஒரு அணி 56 டாட் பந்துகளை எடுத்துக்கொண்டது இதுவே முதல்முறையாகும்.
நேற்றைய போட்டியில், மொத்தமாகவே 29 ஓவர்களில் ஐபிஎல் இறுதிப்போட்டியே நிறைவடைந்திருந்தது, இதன்மூலம் குறைந்த ஓவர்கள் எடுத்துக்கொண்ட ஐபிஎல் இறுதிப்போட்டியாக இது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |