அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அரசாங்கம் கூறியபோதும் கடந்த வருடத்தில் வெறும் 18 கட்டில்களே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
"ஐடிஎச் வைத்தியசாலையில் ஐசியு கட்டில்கள் 8, தெல்தெனியவில் 6, கராபிட்டியவில் 24, நுவரெலியாவில் 5, தேசிய வைத்தியசாலையில் 96, முல்லேரியாவில் 8, மாரவிலவில் 2, தம்புள்ளையில் 3, பேராதெனியவில் 15, மட்டக்களப்பில் 15, பதுளையில் 20, கேகாலையில் 6, வத்துபிட்டிவலயில் 5, மாத்தறையில் 15 கட்டில்கள் காணப்படுகின்றன
முழு மேல் மாகாணத்திற்கே 193 ஐசியு கட்டில்கள் காணப்படுகின்றன.
இன்று நாள் ஒன்றுக்கு 900 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அவசர நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இந்நிலை விரைவில் ஏற்படலாம்" என்று சமன் ரத்னப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.