முதன்முறையாக மாங்குளத்தில் வழங்கப்பட்ட குடும்ப போராளிகள் பட்டயம்...!
மாவீரர் குடும்பங்களைச் சரியாக அடையாளம் கண்டு உறுதிப்படுத்தும் நோக்கில், மாவீரர் குடும்பச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது.
போர்க்காலத்தில் பல மாவீரர் குடும்பங்களின் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குத் தீர்வாகக் குறித்த சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவீரர் குடும்பங்கள் அல்லாத சிலரும் தங்களை அவ்வாறு அடையாளப்படுத்திக்கொண்டு உதவிகளைப் பெறுவதாகவும், இதனால் உண்மையான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மாவீரர் துயிலும் இல்லங்களில் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மாவீரர் குடும்பங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் மாதத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், குடும்பங்களை உரிய முறையில் உறுதிப்படுத்தி தொடர்ந்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதை தொடர்ந்து காணொளியில் பார்க்க முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |