தன் மீது குற்றமென்றால் வழக்கு தொடருங்கள்: ஜனாதிபதி அநுர பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி தொடர்பில் கருத்து வெளியிட்டமையால் எழுந்த குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதில் வழங்கியுள்ளார்.
தென்னிலைங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதியை மாற்றக் கோரி அனுப்பிய கடிதம் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சட்டவிரதமாக அறிந்து கொண்டதாக எழுந்து குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
வழக்கு தொடர வாய்ப்பு
இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி அநுர, செய்தி மூலமாக அதனை அறிந்து கொண்டதாகவும், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், அது தொடர்பில் தாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் தான் அறித்திருந்தது குற்றமாக இருந்தால், அதற்கு எதிராக வழக்கு தொடர ஒரு சட்டத்தரணியாக வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
