நெருக்கடி நிலை மேலும் மோசமடையும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Harsha de Silva
By Sumithiran
பலருக்கு சரியான புரிதல் இல்லை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாட்டில் பலருக்கு சரியான புரிதல் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மேலும் சீரழிந்து செல்லும்
அதிபர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார சீர்திருத்தங்களை துரிதமாக மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் சீரழிந்து செல்லும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிபர் ரணிலின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைத் தவிர மற்ற அனைவரும் பல தசாப்தங்களாக சீர்திருத்தங்களை நிராகரித்து வந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
