நாடு இருளில் மூழ்கினால் ஏற்படவுள்ள மற்றுமொரு பேரிடர் - வெளியான பரபரப்பு தகவல்
மின்சார ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தால் நாடு இருளில் மூழ்கினால் நீர் விநியோகமும் தடைப்படும் என அதிகாரிகள் புதிய அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளனர்.
அனைத்து நீரேற்று நிலையங்களும், நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மின்சாரம் மூலமே இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கை மின்சார சபையின் பணியாளா்கள் மேற்கொள்ளும்பணி பகிஷ்கரிப்பால் ஏற்படும் மின்சார தடைகளைச் சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகமும் தடைப்படும் என நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க(Upali Ratnayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சாரத் தடை ஏற்பட்டால், தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள மாற்று நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஏதேனும் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை விரைவில் தனியார் மயமாக்கும் முயற்சி இடம்பெறும் என்பது தெளிவாகிறது என ரத்நாயக்க தெரிவித்தார்.
you may like this