மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் - 48 மணிநேரத்திற்கும் அதிகமாக காய்ச்சல் நீடித்தால் ...?
people
hemantha herath
fever
advice
By Sumithiran
48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை விடுப்பதாக தெரிவித்தார்.
மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று மக்கள் தங்கள் சொந்த முடிவுக்கு வரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
