நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு: ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கானது வரும் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாதமையினாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த (2017.07.22) ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நேற்று(25) நடைபெற்றது.
கடமையாற்றிய காவல்துறை
இந்த வழக்கின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக அக்காலத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகஸ்தர் நிதீமன்றில் தோன்றி சாட்சியமளித்தார்.
இதன் போது உங்கள் கைத்துப்பாக்கியை அடையாளம் காட்ட முடியுமா ? என அரச சட்டவாதி சாட்சியிடம் கேட்ட போது "ஆம்" என அவர் பதிலளித்தார்.
அரச பகுப்பாய்வு
ஆனால் சாட்சியாக அடையாளம் காட்ட குறித்த துப்பாக்கி நீதிமன்றில் இருந்திருக்கவில்லை காரணம் கைத்துப்பாக்கியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்ட நிலையில் அது மீள பெறப்படவில்லையென தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பிரதான சான்று பொருள் இல்லாது விசாரணைகளை முன்னெடுக்க முடியாதென தெரிவித்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும் அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பெற்று சான்று பொருளாக நீதிமன்றில் அதனை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு நீதிபதி கட்டளையிடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
