சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது
புதிய இணைப்பு
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது.
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.
இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.
இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ககப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியச் செயற் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அது நடைபெற்றிருக்கவில்லை.
இந்தநிலையில் இன்று கூடும் வேட்பாளர் தெரிவுக் குழு, மாவட்ட ரீதியாகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள்
இந்நிலையில், சுமந்திரனின் (M. A. Sumanthiran) கோரிக்கைக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |