பருத்தித்துறையில் முடிவிற்கு வரப்போகும் சட்டவிரோத செயற்பாடு : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை

Jaffna Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Sumithiran Sep 17, 2025 09:46 AM GMT
Report

 யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

 அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு (17.09.2025) இன்று சென்றிருந்தார்.

அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தாக்குதல் சம்பவம்

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொருக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், கடற்றொழிலார்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் தொடர்பிலும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

பருத்தித்துறையில் முடிவிற்கு வரப்போகும் சட்டவிரோத செயற்பாடு : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை | Illegal Activity Coming To An End In Point Pedro

இந்நிலையிலேயே இது பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிகாரிகள் சகிதம் அமைச்சர் அங்கு விரைந்திருந்தார்.

யாழில் இடிந்து விழுந்தது வரலாற்று சிறப்புமிக்க மந்திரிமனை

யாழில் இடிந்து விழுந்தது வரலாற்று சிறப்புமிக்க மந்திரிமனை

காவல்துறையினரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள்

கடற்றொழிலார்கள் மற்றும் மக்களிடம் கலந்துரையாடி, நடந்தவற்றை கேட்டறிந்து - அவை பற்றி காவல்துறையிடம் எடுத்துரைத்தார். காவல்துறையினரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் ஊடாக மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்த வைத்தார்.

பருத்தித்துறையில் முடிவிற்கு வரப்போகும் சட்டவிரோத செயற்பாடு : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை | Illegal Activity Coming To An End In Point Pedro

 அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

பாதாள உலக தலைவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

பாதாள உலக தலைவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

 காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது

தீவக பகுதிகளில் காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சிதான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது எனவும் அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார்.

பருத்தித்துறையில் முடிவிற்கு வரப்போகும் சட்டவிரோத செயற்பாடு : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை | Illegal Activity Coming To An End In Point Pedro

பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களிடம் சுகநலம் விசாரித்த அமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் இடித்துரைத்தார்

அரச பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு பல பில்லியன் நிதி ஒதுக்கீடு

அரச பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு பல பில்லியன் நிதி ஒதுக்கீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி