யாழில் தேங்காய் மட்டைகளுக்கு நூதன திருட்டு - சிக்கிய நபர்
தேங்காய் மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பளை பகுதியில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றி செல்வது போன்று, வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி அதன் மேல் தேங்காய் மட்டைகளை பரவி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார்.
வாகன சாரதி கைது
இந்நிலையில் சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது தேங்காய் மட்டைகளுக்குள் மணலை கடத்தி சென்றமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில் வாகன சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதனை அடுத்து மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்
மேலும் சாரதியை காவல் நிலையத்தில் வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |