அத்தியாவசிய சேவை எனத் தெரிவித்து இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடு அம்பலம்
arrest
police
vavuniya
court
cow
By Sumithiran
வவுனியாவில் அத்தியாவசிய சேவைகள் என தெரிவித்து பார ஊர்தியில் மாடுகள் கடத்தப்பட்டதை நெளுக்குளம் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
பார ஊர்தியில் அத்தியாவசிய சேவை என பதாதையொன்றை காட்சிப்படுத்தி மாடுகள் கடத்தப்படுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரோசன் தலைமையிலான பொலிஸார் விரைந்து செயற்பட்டு பார ஊர்தியை கைப்பற்றினர்.
புளிதறித்த புளியங்குளம் பகுதியில் வைத்து பார ஊர்தியை கைப்பற்றிய பொலிஸார் பார ஊர்தியில் எவ்வித அனுமதியும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளை மீட்டனர்.
இந் நிலையில் நாளையதினம் மாடுகளை கடத்திச் சென்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






1ம் ஆண்டு நினைவஞ்சலி