திருகோணமலையில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் கைது!
Trincomalee
Sri Lanka Navy
By Sathangani
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் முகமாக நேற்றும்(04) நேற்று முன்தினமும்(03) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்தல்

இவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 116 கடல்வெள்ளரிகள், 03 டிங்கிகள் மற்றும் சுழியோடி சாதனங்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 48 வயதிற்கு இடைப்பட்ட தம்பலகாமம் மற்றும் சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 10 பேரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


