யாழில் சட்டவிரோத மீன்பிடி - சிக்கியுள்ள முக்கிய ஆதாரங்கள்
வடக்கில் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற நிலையில், யாழில் இன்று (03) அதிரடிப்படையினரால் ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - பாஷையூர் பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த வீடொன்றில் இருந்தே குறித்த ஜெலட்டின் குச்சிகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில், யாழ்.விசேட காவல்துறை அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திட்க்கு விரைந்த அதிரடி படையினரால் குறித்த ஜெலட்டின் குச்சிகள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத செயற்பாடு

அங்கு பொதி ஒன்றிலிருந்து 20 ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.
குறித்த ஜெலட்டின் குச்சிகளில் உள்ள வெடி மருந்துகளை பிரித்தெடுத்து மீன் பிடிக்கான டைனமேட் தயாரிக்க கடற்றொழிலாளர்கள் பயன்டுத்தியுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அதுமாத்திரமின்றி இவ்வாறு டைனமேட் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயற்பாடு என்பதனால், குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
மீட்கப்பட்டுள்ள ஜெலட்டின் குச்சிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்