விஜய்க்கு கிடைத்த சரித்திர வெற்றி : தந்தை சந்திரசேகர் வெளியிட்ட அறிவிப்பு
தமிழக சட்ட மன்றத் தேர்தலின் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒரு தந்தையாக மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றேன் என இயக்குநரும், தவெக தலைவர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக தமிழக முதல்வராக வருவேன் என்ற நம்பிக்கை விஜயிடம் இருந்ததாகவும் இது விஜய்க்கு கிடைத்த சரித்திர வெற்றி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
விஜய்யின் தந்தை பாராட்டு
இந்தநிலையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 110 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளதையடுத்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.
#WATCH | Chennai, Tamil Nadu: On TVK, currently leading in 110 seats of the total 234 in the state, TVK chief Vijay's father, SA Chandrasekhar, says, "Definitely, he will do a big change in Tamil Nadu." pic.twitter.com/o5BQWKkKbg
— ANI (@ANI) May 4, 2026
என் மகனுக்கு எனது வாழ்த்துகள். கடந்த இரண்டு வருடங்களாக தமிழக முதல்வராக வருவேன் என்ற நம்பிக்கை விஜயிடம் இருந்தது. அந்த அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன்.
ஒரு தலைவராக, கூட்டணி இல்லாமல் சொந்தக் காலில் நிற்பேன் என்றது அவரது துணிச்சல். கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது. இது விஜய்க்கு கிடைத்த சரித்திர வெற்றி.
விஜயை தலைவராக மக்கள் பார்க்கவில்லை. தங்களில் ஒருவராக பார்த்தனர். தமிழக மக்களுக்கு என்னுடைய நன்றி“ இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்