ஆட்சி அமைக்கப்போவது எப்படி..! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை
புதிய இணைப்பு
மதியம் 12 மணிவரையான நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலைப் பெற்றுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் எப்படி ஆட்சி அமைக்கலாம் என்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்யசாமியுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சற்றுமுன் வெளியாகும் தபால் வாக்குகளின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ம் திகதி நடந்து முடிந்தது.
234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
வாக்குகள் பெற்று முன்னிலை
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 25 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதைபோல திரு.வி.க.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி 10 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அதேபோல எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 9 மணி நேரம் முன்